வணக்கம் நண்பர்களே.
கடந்த ஆண்டு ஜூன் 29 தேதிக்கு பிறகு முகநூல் கணக்கை டிஆக்டிவேட் செய்துவிட்டேன். செய்தித் தாள் வாசிப்பது, தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது, அரசியல் விமர்சனம் செய்வது போன்ற பொறுப்பான குடிமகன் செய்யும் காரியங்களை கைவிட்டு பொறுப்பில்லாத ஊதாரியாக ஆகிவிட்டேன்.
எப்போதுதாவது சில விஷயங்களை முகநூலில் எழுதத் தோன்றும். ஆனால் இந்த பலவீனத் தருணங்களை வென்று முகநூல் பக்கம் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
வலைப்பூவிலாவது அவற்றை எழுதி வைப்போமே எனத் தோன்றியதால் தூசி தட்டி இதைப் புதுப்பித்திருக்கிறேன். இதில் வெளியாவது முகநூலிலும் காணம் வசதி இருப்பதால் முகநூலையும் ஆக்டிவேட் செய்து வைத்திருக்கிறேன். என்ன உங்கள் லைக்குகளையும் கமாண்டுகளையும்தான் பார்க்க முடியாது.
நன்றி.